காரைக்குடியில் முருகன் பாடல்கள் பாடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில், சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் இருந்து, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா, பாஜக மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் 15 பேர் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல இருந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முருகன் பக்தி பாடல்கள் பாடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.