பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் மொத்த வியாபார பழக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழங்கள் எரிந்து சேதமடைந்தன.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் முகமது ஈசாக், மன்சூர் ஆகிய சகோதரர்கள் மொத்த பழ வியாபார கடை நடத்தி வருகின்றனர். இதன் பின்பகுதியில் லேசாக தீப்பற்றிய நிலையில், சிறிது நேரத்தில் பழக்கடையில் அடுக்கி வைக்கப்பட்ட மரப்பெட்டி மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தீ பரவியது.
இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழங்கள் எரிந்து சேதமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.