மதுரையில் முதியவர் ஒருவரை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், சாலையில் சென்ற மக்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து கிடைக்கவில்லை என முதியவர் ஒருவர் கூறிய நிலையில், “பேருந்து இல்லையென்றால் நடந்து செல்” என சிறப்பு சார்பு ஆய்வாளர் அந்த முதியவரை ஒருமையில் பேசினார்.