சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து பண்டல் பண்டலாக புகையிலை சிதறியது.
கிருங்காகோட்டை அருகே மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லோடு வாகனம் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற போலீஸார், வாகனத்திலிருந்து சிதறிக் கிடந்த பண்டல்களை சோதனை செய்தனர்.
அதில் பீடிக்குள் வைக்கப்படும் புகையிலை இருந்தது தெரியவந்தது. வாகன ஓட்டுநரும் தப்பி ஓடியதால் புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டதா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.