கடலூர் மற்றும் ஈரோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 500 வலி நிவாரணி மாத்திரைகள், 2 தின்னர் பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.