திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 106 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வரும் நிலையில், கடந்த 35 மாதங்களாக மாதந்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கையாக 106 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்க பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.