தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்களின் அறுவடை தொடங்கிய நிலையில், அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில், அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அறுவடைக்காக பல நாட்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அறுவடை இயந்திரங்களின் வாடகையும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆகையால், அரசு சார்பில் கூடுதல் அறுவடை இயந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.