கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சாகச செயலில் ஈடுபடும் வகையில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், கல்லூரிக்கு வரும் மாணவிகளின் முன்பு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வந்து சாகச செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனடிப்படையில், விருத்தாசலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் சென்ற கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுபோன்ற சாகச செயல்களின் இனி ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.