மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ? - டிடிவி தினகரன் கேள்வி!
Oct 29, 2025, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ? – டிடிவி தினகரன் கேள்வி!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :  “சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அம்மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை கூட நியமிக்காமல் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது எனறும் அவர் கூறியுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை மருத்துவர்கள் பற்றாக்குறை எனக்கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: TTV DhinakaranTamil Nadu Health Departmentgovernment hospitalstamilnadu hospitalsdoctors shortage
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

Next Post

விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies