காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஃபிட்டராக பணிபுரிந்து வரும் கண்ணன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இதனடிப்படையில், காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி காமாட்சி அவென்யூ பகுதியில் உள்ள கண்ணனின் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட சம்பவம் சக ஊழியர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.