திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மாந்திரீகம் மூலம் கோடீஸ்வரனாக்குகிறேன் என கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ் என்பவரிடம், ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் மாந்தீரிகம் மூலம் சதீஷை கோடீஸ்வரனாக்குவதாக கூறி, தனது யூடியூப் சேனல் வீடியோக்களை காண்பித்து நம்பவைத்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்வதாக கூறி, சதீஷிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை பெற்றுக் கொண்டு ரகு மாயமாகியுள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தில் ரகுவை தேடி கண்டுபிடித்த சதீஷ், தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது மாந்தீரிகம் மூலம் சதீஷை கொன்றுவிடுவதாக ரகு மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், ரகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.