திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறங்காவலர்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான பணியில் சேரும்போது இந்துக்கள் என்று கூறி ஆதாரங்களை சமர்ப்பித்து பின்பு வேறு மதங்களை பின்பற்றி வருவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரில் தொடர்புடையவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இந்துக்கள் என்று கூறி பணியில் சேர்ந்த 18 பேர் வேற்று மதங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்துக்கள் என்று கூறி பணியில் சேர்ந்த பின்பு வேற்று மதங்களை பின்பற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 8 பேரையும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் கோயில்களில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அறங்காவலர் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.