சென்னை ஆவடி காவல் ஆணையர் கண்முன்னே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஆவடியில் அமைந்துள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கையில் பெட்ரோல் கேனுடன் வந்த பெண் ஒருவர் காவல் ஆணையர் சங்கர் கண் முன்னே, பெட்ரோலை தமது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக அங்கு இருந்த காவலர்கள் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அந்த பெண் யார், எதற்காக தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.