பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் தெரவித்துள்ளார்.
மதுரை பரவை சாலையில் அமைந்துள்ள குயின் மீரா பள்ளியில் “குயின் மீரா பேட்மிண்டன் அகாடமி” திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், தமிழ்நாடு அளவிலான சப் ஜூனியர் பேட்மிட்டன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் கல்வியை போன்று விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.