மாலத்தீவில் கடலில் நீந்தி கொண்டிருந்த பெண்ணை சுறா மீன் கடித்ததில் அவர் காயமடைந்தார்.
உலக நாடுகளின் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலத்தீவில் தங்களது சுற்றுலாவை கழிக்கின்றனர். அந்தவகையில், கடலில் நீந்தி கொண்டிருந்த பெண்ணின் கையை சுறா மீன் கடித்தது.
இதனையடுத்து அப்பெண் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.