ஸ்வீடனில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு, பள்ளி படிப்பை முறையாக முடிக்காத மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். வழக்கம் போல் மாணவர்கள் படித்து கொண்டிருந்த போது அங்கு நுழைத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.