மத்தியபிரதேசத்தில் உணவுக்காக துரத்திய காட்டுப்பன்றியோடு கிணற்றுக்குள் புலி விழுந்து. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் கட்டில் மற்றும் கூண்டை கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கினர். அப்போது பன்றி மற்றும் புலி ஆகிய இரண்டும் கட்டிலில் ஏறியது. பின்னர் கூண்டுள் புலி சென்ற நிலையில், கட்டிலில் இருந்த பன்றியையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.