வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணி 79 சதவீதம் முடிந்துவிட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் அராய் தெரிவித்துள்ளார்.
வங்கதேச எல்லையில் வேலி அமைக்கப்பட்டு வருவதன் நிலை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணையமைச்சர் நித்யானந்த், சுமார் 4 ஆயிரத்து 96 புள்ளி 7 கிலோ மீட்டர் கொண்ட எல்லையில் 3 ஆயிரத்து 232 கிலோமீட்டர் வரை வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.