கேரள மாநிலம், பாலக்காட்டில் கால்பந்தாட்டத்தின் போது பார்வையாளர் அரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வல்லபுழா பகுதியில் கால்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மலப்புரம், கோழிக்கோடு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் அரங்கத்தின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் அமர்ந்திருந்ததால் பார்வையாளர்கள் அரங்கம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.