சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் நடைபெற்றது. அப்போதுசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 3 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மத்திய சட்டத்துறை வாயிலாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.