இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகயை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத செயல்பகளுக்கு பயன்படுத்துவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.