U-19 மகளிர் T-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தழிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் U-19 மகளிர் T20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டின் செல்வி G.கமலினிக்கு தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாகவும், எதிர்கால முயற்சிகளில் அணி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.