சூரத் அருகே சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், சூரத் அருகே வரியாவ் பகுதியில் தாயுடன் நடந்து சென்ற 2 வயது ஆண் குழந்தை சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளது. கனரக வாகனங்கள் சென்றதால் சேதமடைந்த கால்வாய் மீது நடந்து சென்றபோது சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றுள்ளனர்.
ஆனால், குழந்தையை மீட்க முடியாததால், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், சாக்கடைக் குழிக்குள் இறங்கி குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 150 மீட்டர் ஆழத்திற்கு இறங்கி குழந்தையை தேடியும் கிடைக்காததால், நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையை தேடும் பணியில் 70 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.