வேலூரில், சாலை வசதி கேட்டு, பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஸ்பா பகுதியில், சாலை வசதி செய்து தரக்கோரி மேட்டு பஜார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இந்த மேட்டுப் பஜார் தெருச் சாலை 5 ஆண்டுகளுக்கு மேல் குண்டும் குழியுமாக உள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.