சென்னை கிளாம்பக்கத்தில் வட மாநில பெண் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் மாதவரம் செல்லும் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரத்தில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.
ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும் மேலும் சிலர் ஆட்டோவில் ஏறியதாகவும், கத்திமுனையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆட்டோவில் சென்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர்.
நெற்குன்றம் அருகே சென்றபோது ஆட்டோவில் இருந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட முத்தமிழ்செல்வன், தயாளன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.