ஸ்ரீவில்லிபுத்தூரில், கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி முடிந்து மாணவர்கள் வழக்கம்போல் வீட்டிற்கு புறப்பட தயாரானபோது, ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே வந்ததால், அனைவரும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஆவேசம் அடைந்த மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், மாணவர்களிடம் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டம் கைவிட்டப்பட்டது.