நெல்லை அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகில் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் கன்றுக்குட்டி ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இருந்து கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.