சென்னை அடுத்த அம்பத்தூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் புகழ்வாணன் இருவரும் இருசக்கர வாகனத்தில் புதூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் ஜெகதீஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த புகழ்வாணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.