நவாஸ் கனியின் செயலை அமைச்சர் சேகர் பாபு கண்டிக்காதது ஏன்? - இந்து முன்னணி கேள்வி!
Oct 7, 2025, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவாஸ் கனியின் செயலை அமைச்சர் சேகர் பாபு கண்டிக்காதது ஏன்? – இந்து முன்னணி கேள்வி!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர் என இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் சேகர்பாபு போராட்டத்தில் கலந்து கொண்ட இந்துக்களையும் முருக பக்தர்களையும், இந்து முன்னணியினரையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து அரசியல் ஆதாயம் கருதி முருகபக்தர்களுக்கு எதிராகப் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த நவாஸ் கனி, மற்றும் அப்துல் சமது ஆகியோர் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் இந்துக்களின் புனித தலமாக இருந்தபோதும் தன் சகாக்களுடன் வந்து அசைவ உணவை சாப்பிட்டு மதமோதல் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து மதப்பற்றாளராக இல்லையென்றாலும் கூட , அறநிலையத்துறையின் அமைச்சர் என்ற வகையில் நவாஸ் கனியின் செயலை கண்டித்தாரா? இதுவரை அந்த திருப்பரங்குன்றத்தின் புனிதத்தைக் காக்க ஏதாவது குரல் கொடுத்தாரா? அல்லது இந்து உணர்வுடன் வேறு ஏதாவது ஒரு அமைச்சர்கள் குரல் கொடுத்தனரா? என்றும் அவர் வினவியுள்ளார்.

இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமே இந்தப் பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். மக்களும் விழிப்புணர்வு பெற்று இச்செயலுக்கு மிகப் பெரிய அளவில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.   திமுகவிற்கு தற்போது வயிறு எரிகின்றது.

அதன் வெளிப்பாடாக சேகர்பாபு கதறுகிறார் . இவரின் கருத்தும், கதறலும் இனி இந்துக்கள் மத்தியில் ஜெயிக்காது என்பதற்கு நேற்று நடந்த இந்து எழுச்சி ஆர்ப்பாட்டமே சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோவில்களின் நலனில் அக்கரை காட்டாமல் , பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். என்றும், அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Muruga devoteessentiments of HindusNawaz Ganihindu munnaniminister saker babuKadeshwara SubramaniamThiruparankundram hill
ShareTweetSendShare
Previous Post

முறையாக சமைக்காத இறைச்சியில் இருந்து ஜிபிஎஸ் வைரஸ் பரவல் : மருத்துவர்கள் எச்சரிக்கை!

Next Post

காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் பெண் எஸ்.ஐ. காயம்!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies