சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்த பெண் எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சோமநாதபுரம் காவல்நிலையத்தில் பிரணிதா என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காவல்நிலையத்துக்கு வந்த விசிக மாவட்ட நிர்வாகி இளைய கவுதமன், கோயில் தொடர்பான மனு ஒன்றை விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது தான் விசாரிக்க முடியாது எனவும் உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் பிரணிதா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைய கவுதமன், பிரணிதாவை ஆபாசமாக பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரணிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.