பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது ஏன் என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை அலட்சியத்துடன் கடந்து செல்வதாக குறிப்பிட்டுள்ள விஜய்,
பிற மாநிலங்களைப் போல் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான ஆய்வைக் கூட தமிழக அரசு மேற்கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கான ஆய்வை, தமிழக அரசு விரைவில் தொடங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.