அரியலூர் அருகே திமுக மற்றும் அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷமிட்ட பாமகவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்மையில், காடுவெட்டியில் நடைபெற்ற மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு சிலை திறப்பு விழாவில், அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
அப்போது, அங்கிருந்த சிலர் திமுகவிற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் கோஷமிட்டதாக மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாமகவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.