பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாத தங்க கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது, திரண்ட ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும்.
மேலும், விழாவின் முக்கிய அம்சமாக கருடசேவை மற்றும் திருத்தேரோட்டமும் நடைபெறும். இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளை யொட்டி, வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.