திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வழக்கில் சிக்கிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை விடுவிக்கக் கோரி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அருகே உள்ள பழையபாளைய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், அதன் அருகே அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நித்திய கல்யாணி காழ்ப்புணர்ச்சியால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது தவறான புகார் அளித்ததாக தகவல் வெளியானது.
எனவே நாகராஜனை விடுவிக்கக் கோரி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் சவுந்தர்யா பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.