மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், விமானப்படை வீரர்கள் 2 பேர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். குவாலியர் அருகே உள்ள சிவபுரி பகுதியில் விமானம் பறந்தபோது திடீரென வெடித்து சிதறி கீழே விழுந்தது.
நல்வாய்ப்பாக அதில் இருந்த விமானப் படை வீரர்கள் இருவரும் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே, கீழே விழுந்த விமானத்தில் தீப்பற்றி எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.