காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் தங்க முலாம் பூசப்பட்ட வீணையை வழங்கினர்.
சென்னையை சேர்ந்த நீரஜா விஜயகுமார் குடும்பத்தினர் சார்பில் 10 கிலோ எடை கொண்ட வீணை காணிக்கையாக வழங்கப்பட்டது.
ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயர் முன்னிலையில் வீணை வழங்கப்பட்டதையடுத்து, காமாட்சி அம்மனுக்கு பிரம்மாண்ட ரோஜா மற்றும் தாமரை மாலைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.