சென்னை தாம்பரம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மீது கனரக வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் அருகே வசித்து வந்த பத்மநாபன் மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பக்கவாட்டில் வந்த கனரக வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்ட மக்கள், தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.