அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் ஹேமன்யா – தமன்னா என்ற மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்பெறும் வகையில் தொடு திறன் நாற்காலியை தயாரித்து அசத்தியுள்ளனர்.
கோவையில் நடைபெற்ற பிக் பேங்க் 2025 போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 226 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 128 கண்டுபிடிப்புகள் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டன.
பொதுநல சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட மாணவிகள் ஹேமன்யா – தமன்னாவுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், சாதனை மாணவிகளுக்கு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.