கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையம் மூடிக் கிடப்பதால் புகாரளிக்க வந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கடந்த 3-ஆம் தேதி வந்த வடமாநில இளம்பெண்ணை, சில நபர்கள் ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து கூடுவாஞ்சேரி மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காவல்நிலையம் பூட்டிக்கிடக்கும் நிலையில், புகார் மனு அளிக்க வந்தவர்கள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கதவுக்கு பின்னால் நின்றுகொண்டு மனு தொடர்பாக காவல்துறையினர் விசாரிப்பதால் புகாரளிக்க வந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.