திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 313 ஏக்கர் பரப்பளவில் புதிய சோலார் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த சிப்காட் சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது சிப்காட் முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் அனுமதி பெறாத சிப்காட்டில் புதிய சோலார் நிறுவனத்தை திறந்து வைத்தது சட்ட வீதிமீறல் என்றும், முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
நெல்லை ரயில் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையமும் இதேபோல் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் இயங்கி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.