இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர்.
எல்லை தாண்டி பிடித்ததாக தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை கடந்த 27-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்கக்கோரி பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர்.