பழனி அடிவாரம் திருவாவினன்குடி கோவில் அருகே உள்ள கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் திருவாவினன்குடி கோவில் எதிரே உள்ள சன்னதி வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென தீ பரவத் தொடங்கியது. அப்பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கடைகளின் முன்பகுதியில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர். ஆனால், பூஜை சாமான் கடையில் தீப எண்ணெய், நெய், சூடம், பத்தி, சாம்பிராணி உள்ளிட்டவை தீப்பிடித்ததால் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பல மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.