இஸ்ரேல் மீதான போர் குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுப்பதற்கு தடை விதிப்பதற்கான ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார்.
காசாவில் இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விவகாரத்தில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்,
அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் அடிப்படை ஆதாரமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அந்நீதிமன்ற அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் எனவும், அவர்களது உறவினர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதேபோல கிறிஸ்தவர்களை பாகுபாட்டுடன் நடத்துவதற்கு எதிரான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.