யுஜிசி வரைவு அறிக்கையில் தேசிய கல்விக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு அதிகாரமளிப்பதற்கான வரைவு அறிக்கையை யுஜிசி தயாரித்தது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், பொதுமக்களிடம் யுஜிசி கருத்து கேட்கிறது.
இந்தச் சூழலில், யுஜிசி வரைவு அறிக்கையில் தேசிய கல்விக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாக் அங்கீகாரம் மட்டுமன்றி, தேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தும் விதத்தின் அடிப்படையிலும் அவை தரவரிசைப்படுத்தும் என யுஜிசி அறிவித்துள்ளது.