மகா பெரியவர் முக்தியடைந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தியானம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடத்தின் 68வது பீடாதிபதியாக சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திகழ்ந்தார். மகா பெரியவர் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர், இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் சனாதன தர்மத்தை எடுத்துரைத்த சரஸ்வதி சுவாமிகள் 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முக்தி அடைந்தார். காஞ்சி மடத்தில் சரஸ்வதி சுவாமிகளின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்த தினத்தையொட்டி பிருந்தாவனத்தில் வைக்கப்பட்டுள்ள மகா பெரியவர் சிலைக்கு தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியவாறு தியானம் மேற்கொண்டனர்.