டெல்லி என்சிஆர் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.
நொய்டாவில் அமைந்துள்ள ஷிவ் நாடாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் சந்தேகத்திற்கு இடமாக எந்த ஒரு பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகள் கூறினர்.
இதேபோல டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கும் சோதனை நடைபெற்றது.