சென்னையை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ட்ரோன் நிறுவனத்துடன் ராணுவ சேவைக்காக 400 ட்ரோன்களைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 230 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மூன்றுகட்டமாக கையொப்பமானது.
இந்தச் சூழலில் சீன உதிரி பாகத்துடன் ட்ரோன் வடிவமைக்கப்பட்டதாக தகவல் வெளியானதால், ரகசிய தன்மையைக் காக்கும் பொருட்டு சென்னை நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது.
ஏற்கெனவே கல்வானில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தற்போது சுமுகமான சூழல் திரும்பினாலும், சீன உதிரி பாகங்களுடன் கூடிய ட்ரோன் எல்லையில் பயன்படுத்தப்படுவது ரகசிய தன்மையை பாதிக்கும் என கூறி, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.