பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதாக கூறி, சக ஓட்டுநர்கள் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், பேருந்து நிலையத்தில் காலியாக இருந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி மாணவிகளை அமர வைத்துக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இதனை தட்டி கேட்ட அரசு பேருந்து டிரைவர் செல்வம் என்பவரை பள்ளி மாணவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, ஒரு மாணவன் தாக்கிவிட்டு தப்பிச் சென்றான்.
மற்ற மாணவர்கள் தப்பி ஓட முயன்ற நிலையில் அங்கிருந்த மற்ற கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் அந்த மாணவர்களை மடக்கி பிடித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சக மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.