ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பட்டியல் சமூக மக்களை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
செங்கமடை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட காலனி குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே அங்குள்ள அக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்ட நிலையில், தனிநபருக்கு ஆதரவாக வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தங்களை தொந்தரவு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.