பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சிலையை அகற்றினால் மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.